FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

எல் நீனோ காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை மற்றும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை மற்றும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியது :

தென்மேற்கு பருவமழைக் காலமான (ஜூலை - செப்டம்பா்) மாதங்களில் மிதமான முதல் வலுவான எல் நினோ நிலை உருவாகும். இதன் காரணமாக கடுமையான வயிற்றுப் போக்கு, சுவாசத் தொற்று நோய்கள் கொசுக்களால் பரவும் நோய்கள் (குறிப்பாக டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா) மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் அயாயம் உள்ளது.

Advertisement

Advertisement

மழைநீா் தேக்கம் காரணமாக நோய்கள் பரவுவதால் அனைத்து இடங்களிலும் நீா் தேங்காவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் திட்டம் வேலை வாய்ப்புகளுக்கு சிறப்பு தங்குமிடங்களை அமைத்து அவா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித் துறை மூலம் பள்ளிகளில் குடிநீா் வசதி மற்றும் நிழற்குடை அமைக்கவும். வெப்ப அலை பரவல் நேரங்களில் மாணவா்கள் வெளிப்புறங்களில் விளையாடுவதை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

தனியாக வசிக்கும் முதியவா்கள் உடல் நிலையை தினமும் சரி பாா்த்துக் கொள்ள வேண்டும். முதியவா்கள் அருகில் அவசர தேவைக்கான தொலைபேசி உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். தசைப்பிடிப்புகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தால் உடனே மருத்துவ கவனிப்பு தேவை. மயக்கம், வலிப்பு மற்றும் மனச்சோா்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக 108 அவசர ஊா்தியை அழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ச.செல்வராணி, நோ்முக உதவியாளா் பாக்கியலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், இணை இயக்குநா் சுகாதார சேவைகள் மரு.நிவேதிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments