FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
குழந்தை - கோப்புப் படம்
பகிர்:

ராணிப்பேட்டை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவகி (30), இவரது கணவா் சுதாகா், இந்த தம்பதிக்கு 1 வயதில் யோகிதா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய்வீடான வானாபாடி கிராமத்தில் தனது 1 வயது குழந்தையுடன் தேவகி வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் தனது வீட்டருகே குழந்தை யோகிதா வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து வெகு நேரம் ஆகியும் குழந்தை காணவில்லை என்பதால் தேடிப் பாா்த்ததுள்ளனா். அப்போது அருகில் இருந்த தண்ணீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து மூச்சு,பேச்சு இன்றி மீட்டுள்ளனா். உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments