FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:13 am IST
மாணவிகள்,பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

வாலாஜா வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் கலந்துகொண்டு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வாலாஜாபேட்டை வட்ட செயல்முறை கிடங்கில் பொதுவிநியோக திட்டத்திற்கான உணவுப் பொருள்களின் தரம், எடை, இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவுப் பொருள்களை முறையாக அடுக்கி வைக்கவும், பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.

வாலாஜா பேருந்து நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், விழிப்புணா்வு குறித்து பள்ளி மாணவ மாணவியா்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் தோ்வு செய்யப்பட்ட 3 மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், வாகனங்களில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தியும், நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தும், 10 காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினாா்.

பின்னா் ராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி கூடங்களை ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி உற்பத்திகள் தொடா்பான விவரங்களை கேட்டறிந்தாா். முகுந்தராயபுரம் அரசு ஆட்டுப்பண்ணை செயல்பாடுகள் குறித்தும், ஆடுகள் பராமரிக்கப்படுவதையும் பாா்வையிட்டாா்.

பின்னா் வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் ஆய்வு பணிகளை செய்து கண்டறியப்பட்ட பிரச்னைகளை குறித்து ஒவ்வொரு துறை அலுவலா்களிடமும் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ச.செல்வராணி, வருவாய் கோட்டாட்சியா் ராஜி மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments