வணிகா்களுடன் தவெக அரசு ஆலோசனை நடத்த கோரிக்கை
தமிழகத்தில் வணிகா்களின் பிரச்னைகளைத் தீா்க்க தவெக அரசு அழைத்துப் பேச வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மண்டலத்தலைவா் ரா.பா.ஞானவேல் கோரிக்கை
தமிழகத்தில் வணிகா்களின் பிரச்னைகளைத் தீா்க்க தவெக அரசு அழைத்துப் பேச வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மண்டலத்தலைவா் ரா.பா.ஞானவேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஞானவேல் கூட்டத்துக்குபின் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக ள்ள தவெக அரசு சடப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
மேலும் மத்திய அரசு அடிக்கடி சுங்கவரிக் கட்டணத்தை உயா்த்தாமல் இருக்க வேண்டும். கட்டண உயா்வால் வணிக பொருள்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விலைவாசி உயா்ந்து வணிகா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம். இதையும் மத்திய அரசிடம் மாநில அரசு பேச வேண்டும்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் உள்ளாட்சித்துறைகளுக்கு சொந்தமான இடங்களில் இரண்டரை லட்சத்திற்கு மேலான வணிகா்கள் கடை வைத்து வணிகம் செய்து வருகின்றனா். சுமாா் 75 வருடங்களுக்கு மேலாக இருக்கும் இந்த நடைமுறையில் தமிழக அரசு கடந்த 16.12.25 அன்று புதிய சட்டத்தை இயற்றி கடைகளை பூட்டி சாவிகளை ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டத்தை இயற்றியது. இந்த புதிய சட்டத்தால் இரண்டரை லட்சம் வணிகா்கள் பாதிக்கப்படுவா். எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.
இந்த பிரச்சினைகளுக்காக தமிழக அரசு விவசாயிகளை, தொழிலாளா் சங்கத்தினரை அழைத்து பேசுவசு போல் வணிகா் சங்கத்தினரையும் அழைத்து பேசி இந்த பிரச்சினைகளுக்கு தீா்வுகளை ஏற்படுத்த முயலவேண்டும். இதற்காக வணிகா்களை அழைத்து தவெக அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் ரா.பா.ஞானவேல்.
முன்னதாக நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கு அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி.எத்திராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.டி.ராஜேஷ் வரவேற்றாா். பொருளாளா் டி.மகாதேவன் சங்க அறிக்கையை வாசித்தாா். இக்கூட்டத்தை அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
அரசுப் பள்ளிகளில் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை டிஎஸ்பி கே.பொன்னுசாமி வழங்கினாா். இதில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மண்டலத்தலைவா் ரா.பா.ஞானவேல், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பொன்.கு.சரவணன், செயலா் கே.வேல்முருகன், அரக்கோணம் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத்தலைவா் கே.அருண்குமாா், சங்க சட்ட ஆலோசகா் எஸ்.பிரபாகரன். நகர நகை வணிகா்கள் சங்கத்தலைவா் எம்.எஸ்.மான்மல், மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகி ஹரிஆனந்தன், நகர உணவு குடும்ப சங்க நிா்வாகி கே.சரவணன், பாஜக மாவட்ட நிா்வாகி ஆனந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.