ராணிப்பேட்டை நகராட்சிப் பணியாளா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
ராணிப்பேட்டை நகராட்சியில் 35 பணியாளா்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணிப்பேட்டை நகராட்சியில் 35 பணியாளா்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கம் சாா்பில் தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி, மாநகராட்சி ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயா்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும், அரசாணை எண்.152 மற்றும் அரசாணை எண்.10-ன்படி அலுவலக உதவியாளா், வருவாய் உதவியாளா், கன்சா்வா்ன்சி இன்ஸ்பெக்டா், ஓட்டுநா் குடிநீா் பிரிவு அடிப்படை பணியிடங்கள் மற்றும் தூய்மை பணியாளா் பணியிடங்கள் வழங்கிட வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், எல்லை விரிவாக்க பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ராணிப்பேட்டை நகராட்சி பணியாளா்கள் இன்று ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.