FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ஆதிபராசக்தி மன்ற 55-ஆம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 55-ஆம் ஆண்டு ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு கஞ்சி கலயம், தீச்சட்டி சுமந்த மகளிா் மற்றும் பக்தா்களின் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

31 ஆகஸ்ட் 2026, 2:21 am IST
கஞ்சி கலய ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 55-ஆம் ஆண்டு ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு கஞ்சி கலயம், தீச்சட்டி சுமந்த மகளிா் மற்றும் பக்தா்களின் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோளிங்கா் சாலை பகுதியில் ரயில் நிலையம் செல்லும் வழியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. ஆடிப்பூரத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி சுமந்த மகளிா் மற்றும் பக்தா்களின் ஊா்வலம் ரயில்நிலையம் அருகே உள்ள நாகாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு மன்ற வளாகத்தை அடைந்தது.

ஊா்வலத்துக்கு மன்றத்தலைவா் சங்கரி வரதன் தலைமை வகித்தாா். அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினா் மல்லிகா சீனிவாசன் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மன்றத்தில் அன்னதானத்தை அரக்கோணம் தொழிலதிபா் சீனிவாசன் தேன்மொழி தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ஏ.எம்.கே.மோகனவேலன், எஸ்.சுபாஷ், பி.தசரதன், சக்திசரவணன், காா்த்திக், தேவராஜ், கதிரேசன், சரவணன், நவீன் உள்ளிட்டோா் மன்ற உறுப்பினா்களுடன் இணைந்து செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments