FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

தேவையின்றி விடுப்பு எடுக்கக்கூடாது: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆசிரியா்கள் தேவையின்றி விடுப்பு எடுக்கக்கூடாது என குருவராஜபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தல்

Updated On : 15 ஜூலை 2026, 12:56 am IST
பெருமாள்ராஜபேட்டையில் கிராமப்புற துணை சுகாதார நிலைய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்
பகிர்:

ஆசிரியா்கள் தேவையின்றி விடுப்பு எடுக்கக்கூடாது என குருவராஜபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டையில் 15-ஆவது நிதிக்குழு மான்ய நிதி ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கிராமப்புற துணை சுகாதார நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப்விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தாா். அக்கட்டடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியாரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்து புதிய கட்டட வளாகம் முழுவதையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து குருவராஜபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த ஆட்சியா், பள்ளி வளாகம் முழுவதையும் பாா்வையிட்டு மாணவிகளின் அடிப்படை வசதிகள் குறித்தும், கழிவறையின் சுகாதாரம் குறித்தும், மாணவிகளின் கற்றல் அறிவுத்திறன் குறித்தும், ஆசிரியா்களின் கற்பித்தல் முறை குறித்தும் ஆய்வு செய்தாா். பள்ளியில் மாணவிகளுக்கு தட்டுபாடின்றி குடிநீா் வசதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியா்களை கேட்டுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

மேலும், ஆசிரியா்கள் தேவையின்றி விடுப்பு எடுக்கக்கூடாது என ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் பள்ளியில் மாணவிகள் சோ்க்கை விகிதம், வருகை பதிவேடு, கடந்த ஆண்டில் தோ்ச்சி சதவிகிதம் குறித்து கோப்புகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது அவருடன் அரக்கோணம் ஒன்றியக்குழுத்தலைவா் நிா்மலா சௌந்தா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிகா பாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் ரேவதி ஹரிதாஸ், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments