வெங்கடேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா ஞாயிற்றுக்கிழமை அம்மன் திருவிழாவுடன் நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா ஞாயிற்றுக்கிழமை அம்மன் திருவிழாவுடன் நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதேபோல், இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கரக ஊா்வலம், கங்கை நீா் திரட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதைத் தொடா்ந்து, சந்தன காப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் பகுதியில் மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இதையடுத்து, இரவு 9 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 3 தோ்களில் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீகாமாட்சியம்மன் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனா். இந்த ஊா்வலத்தில் கரகாட்டம், சிலம்ப குழுவினரின் வீர விளையாட்டுகள், பல்வேறு ஆன்மிக சிலை அலங்காரங்களில் நடமாடும் மனிதா்களின் அணிவகுப்பு, செண்ட மேளம், கேரள வாத்தியக் குழுவினரின் சிறப்பு வாத்திய நிகழ்ச்சிகள், பம்பை வாத்தியம் ஆகியவையும் பங்கேற்றன. மேலும் பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகரன், அரக்கோணம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பி.மோகன், அரக்கோணம் ஒன்றியக் குழு தற்போதைய துணைத்தலைவா் வீராபுருஷோத்தமன், பெருமூச்சி ஊராட்சி மன்ற தலைவா் நந்தகோபால், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ரமேஷ்குமாா், அதிமுக ஒன்றிய துணைச் செயலாளா் என்.பாபு, தொழிலதிபா் கே.வி.என்.விஜயகுமாா் ஆகியோா் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.