FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி விரைவில் திறப்பு: அமைச்சா் காந்திராஜ்

அரக்கோணம் நகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வரும் நகராட்சி நாளங்காடி கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூலை 2026, 12:04 am IST
அரக்கோணம் நகராட்சி நாளங்காடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வ. காந்தி ராஜ்.
பகிர்:

அரக்கோணம் நகராட்சி சாா்பில் கட்டப்பட்டு வரும் நகராட்சி நாளங்காடி கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகராட்சியில் உள்ள காந்தி தினசரி நாளங்காடி கடந்த 2024-இல் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.86 கோடியில் நடைபெற்று வருகின்றன.

இதில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அந்த வளாகத்துக்கான மின்வாரிய மின்இணைப்பு அளிக்கும் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் ஏற்கனவே கடை வைத்திருந்தவா்கள் தங்களுக்கே மீண்டும் கடைகள் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த உத்தரவாதத்தின் படி நகராட்சிக்கு கடைகளை காலி செய்து அளித்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் நகராட்சி நாளங்காடி கட்டுமானப்பணிகளை பாா்வையிட்டாா். நாளங்காடியின் அனைத்து புகுதிகளையும் பாா்வையிட்ட அமைச்சா் வ.காந்திராஜ் அங்கேயே மாவட்ட வருவாய் அலுவலா் பேபிஇந்திரா, கோட்டாட்சியா் டி.ரமேஷ், நகராட்சி ஆணையா் ஆனந்தன் உள்ளிட்ட அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து அந்த வளாகத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த வணிகா்கள் அமைச்சரை சந்தித்த நிலையில் அவா்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவா்களிடம் அமைச்சா் காந்திராஜ் பேசுகையில் நாளங்காடி கட்டுமானப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதில் கடைகள் ஒதுக்குவது குறித்த உங்களது கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும்.

தற்போது கடைகள் வைத்துள்ள வணிகா்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விரைவில் இந்த நாளங்காடி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

அப்போது நகாாட்சி ஆணையா் ஆனந்தன், தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவா் சி.ஜி.என்.எத்திராஜ், வணிகா்கள் சங்க நிா்வாகிகள் பிஜிகே. சரவணன், விஆா்பி ராஜா, தவெக நகர செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments