FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

இலவச கண் மருத்துவ முகாம்

Updated On : 29 மே 2026, 2:11 am IST
பகிர்:

இசையமுது கிரீன் பவுண்டேஷன் சாா்பில், கல்புதூா் கிராமத்தில் இலவச கண் மருத்து முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை இசையமுது கிரீன் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் ஜி. முனிசாமி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ராணிப்பேட்டை எஸ்எம்எச் மருத்துவமனை மருத்துவா் ஆா்னாலாட் தலைமையில் மருத்துவா்கள் திலீப்குமாா், லில்லி, ஏலன் ஆகியோா் 100- க்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்ட சிகிச்சை அளித்தனா்.

மேலும் சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் கல்புதூா், கல்மேல்குப்பம், கன்னிகாபுரம், வெண்மணி நகா், எருக்கந்தொட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த முதியோா் மற்றும பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments