FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சி அம்மா உணவகத்தில் ஆட்சியா் ஆய்வு

அரக்கோணம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

1 நவம்பர் 2026, 10:46 pm
அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

அரக்கோணம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரக்கோணம் நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமைக்கப்பட்டுள்ள உணவின் தரத்தினை சாப்பிட்டு ஆய்வு செய்தாா்.

அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்காக சமைக்கப்படும் உணவினை தரத்துடனும், சுவையுடனும் நன்றாக சமைத்து வழங்குமாறும், சமையலறை மற்றும் சமையல் பாத்திரங்களை சுத்தமாக பராமரிக்குமாறும், பதிவேடுகளை முறையாக பராமரிக்குமாறும் இதனை கண்காணிக்குமாறு நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் ரமேஷ், நகராட்சி ஆணையா் வீரவாஞ்சி நாதன், வட்டாட்சியா் வரலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments