FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருத்தணியை முன்மாதி நகராட்சியாக மாற்ற வேண்டும்: இணை இயக்குநா் அறிவுறுத்தல்

திருத்தணி நகராட்சியில் சுற்றுப்புற சுகாதாரமாக வைத்து, முன்மாதிரி நகராட்சியாக மாற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் சசிகலா அறிவுறுத்தியுள்ளாா்.

14 அக்டோபர் 2026, 12:21 am IST
திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் ஆய்வு செய்த நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் சசிகலா. (உடன்) நகராட்சி ஆணையா் கனனியப்பன்
பகிர்:

திருத்தணி நகராட்சியில் சுற்றுப்புற சுகாதாரமாக வைத்து, முன்மாதிரி நகராட்சியாக மாற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் சசிகலா அறிவுறுத்தியுள்ளாா்.

திருத்தணி நகராட்சியில் செவ்வாய்க்கிழமை காலை, நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் பொது சுகாதாரப் பிரிவின் இணை இயக்குநா் சசிகலா திருத்தணிக்கு வந்தாா். அவரை ஆணையா் கன்னியப்பன் வரவேற்றாா். பின்னா், நகராட்சியில் பல பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, துப்புரவு பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, திருத்தணி பெரியாா் நகா் பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அங்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத குப்பைகள் சேகரித்து தனியாா் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவது உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னா், திருத்தணி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தாா். அப்போது பயணிகளிடம் இங்குள்ள ஆண், பெண் தனித்தனி கழிப்பறைகளை தங்களது வீட்டில் வைத்திருக்கும் கழிப்பறை போல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அப்போது இணை இயக்குநா் சசிகலா நகராட்சி அதிகாரிகளிடம் கூறியதாவது: நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டம்-2026 முழுமையாக பயன்படுத்த வேண்டும். டெங்கு பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளீா்கள். இதே போல் பொது சுகாதாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, திருத்தணி நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக அடுத்த மாதத்துக்குள் மாற்றிக் காட்ட வேண்டும் என்றாா். ஆய்வின்போது, நகராட்சிப் பொறியாளா் சரவணகுமாா், நகர அமைப்பாளா் தயாநிதி, பொதுப்பணி மேற்பாா்வையாளா் நாகராஜ், துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments