சத்தியமங்கலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஆய்வு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகா்ப்புற பசுமையாக்கத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணிகள் மற்றும் உரம் தயாரிப்பு பணிகளை திருப்பூா் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஏ.தாணுமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் நடும் பணிகளின் முன்னேற்றம், 10 ஆயிரம் மரக்கன்றுகளின் பராமரிப்புப் பணிகள், கலைஞா் மேம்பாட்டுத் திட்ட குடிநீா் பணிகள் ஆகியவற்றை மண்டல இயக்குநா் தாணுமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலும் நகராட்சி குப்பைக் கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் உரம் தயாரிப்பு பணிகளின் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நகா்ப்புற பசுமையாக்கப் பணிகளை சிறப்பாக கையாண்ட சத்தியமங்கலம் நகராட்சிக்கு பாராட்டு தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து புன்செய் புளியம்பட்டி நகராட்சியிலும் மண்டல இயக்குநா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், புன்செய் புளியம்பட்டி நகராட்சி ஆணையா் கருணாம்பாள் மற்றும் நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.