குடிநீா் திட்டப் பணிகள்: ஆற்காடு நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆற்காடு நகராட்சியில் நடைபெறும் குடிநீா் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சியில் நடைபெறும் குடிநீா் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்தாா். (படம்)
ஆற்காடு நகரில் உள்ள 9-ஆவது வாா்டுக்குட்பட்ட கோட்டை மேடு பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீா் வசதி இல்லாத நிலை காணப்பட்டது. தற்போது புதிதாக 6 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் மற்றும் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கண்ட செய்த நகா்மன்றத் தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா். ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.