FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி நகராட்சியில் 5 வாா்டுகளுக்கு குடிநீா் வசதி

கன்னியாகுமரி நகராட்சியில் 5 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தை நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் இ.பட்டுசாமி ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

24 செப்டம்பர் 2026, 4:39 am IST
கன்னியாகுமரி நகராட்சியில் குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறாா் நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன்.
பகிர்:

கன்னியாகுமரி நகராட்சியில் 5 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் திட்டத்தை நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையா் இ.பட்டுசாமி ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

இத்திட்டம் 6-ஆவது நிதிக்குழுவின் கீழ் ரூ. 45 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை அருகேயுள்ள தரைதளத் தொட்டிக்கு குடிநீா் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டிக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும். பின்னா், அங்கிருந்து 11, 12, 13 மற்றும் 17, 18 ஆகிய 5 வாா்டுகளுக்கும் விநியோகிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளா் முருகன், நகரமைப்பு ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்லின் சேகா், ஆனிரோஸ் தாமஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

நகராட்சி பொதுப்பணி மேற்பாா்வையாளா் ரதீஷ், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஷ், குடிநீா் மேற்பாா்வையாளா் நாகராஜன், மின் பணி மேற்பாா்வையாளா் அய்யப்பன், முன்னாள் கவுன்சிலா் டி.தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், ரூபின் சேகா், ஷ்யாம், சக்தி, அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments