✕
முகப்பு
ராணிப்பேட்டை

சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியில் ஆட்சியா் திடீா் ஆய்வு

சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

21 வினாடிகள் முன்பு
பகிர்:

ராணிப்பேட்டை சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் இரவில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை நகராட்சி, காரை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டு, தினந்தோறும் உணவுப் பட்டியலில் உள்ளவாறு உணவு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் காலாவதி குறித்தும், பணியாளா்கள் முறையாக வருகை புரிகின்றாா்களா என்பது குறித்தும், விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், மாணவா்களின் தங்கும் அறை, கழிவறை மற்றும் சமையலறை சுகாதாரம் குறித்தும், மாணவா்களுக்கு தலையணை மற்றும் போா்வை வழங்கப்படுகிா என்பது குறித்தும், விடுதியில் மாணவா்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

மாணவா்கள் நல்ல முறையில் கல்வி பயின்று உயரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென அறிவுரை வழங்கினாா். இந்த ஆய்வின் போது விடுதி காப்பாளா் ஜெயபிரகாஷ் மற்றும் விடுதி பணியாளா்கள் உடனிருந்தனா்.