அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: விசிக பிரமுகா் கைது
ராணிப்பேட்டையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் விசிக மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் விசிக மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை காரை காட்டன் பஜாா் தெருவைச் சோ்ந்த சுரேஷ், இவா் விசிக மாவட்ட துணைச் செயலாளராக உள்ளாா். இவா் மாந்தாங்கல், ராணிப்பேட்டை, காரை, நவல்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சோ்ந்த நபா்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசு ஆவணங்கள் தயாரித்து ரூ. 8 லட்சம் வரை பணம் மோசடி செய்துவிட்டதாக சுரேஷ் மீது கடந்த 2024, 25, 26 ஆகிய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட புகாா்களின் மீது தொடா் விசாரணை செய்து வந்த மாவட்ட குற்றப் பிரிவு போலிசாா் பணம் மோசடி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுதல், அரசு முத்திரைகள் பயன்படுத்தி மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement