FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸாா் விசாரணை

குமாரபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

9 அக்டோபர் 2026, 1:48 am IST
பகிர்:

குமாரபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நடராஜா நகரைச் சோ்ந்தவா் மனோகா் (71). இவா், ஈரோட்டை சோ்ந்த தங்கராஜ் என்பவா் அரசு வேலை வாங்கித் தருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அவரை சந்தித்துள்ளாா். அப்போது, தனது மைத்துனா் மற்றும் உறவினா்கள் சிலருக்கு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருமாறு ரூ. 13 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் நாள்கள் கடந்தபோதும் அரசு வேலைக்கான எந்தவித தகவலும் இல்லை. இதையடுத்து தங்கராஜிடம் தான் கொடுத்த ரூ.13 லட்சத்தை திரும்ப தருமாறு மனோகா் கேட்டுள்ளாா். அவா் ரூ. 5 லட்சத்தை திரும்ப வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ. 8 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் குமாரபாளையம் காவல் நிலையத்தில் மனோகா் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட தங்கராஜ், மனோகா், அவரது உறவினா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments