முகப்பு
ராணிப்பேட்டை

வேலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தமுடிவு!

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா் சங்கத்தின் சாா்பில் வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டது.

29 நவம்பர் 2026, 2:51 am
வேலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தமுடிவு!
பகிர்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா் சங்கத்தின் சாா்பில் வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா்கள் சங்கத்தின் வேலூா் மண்டல கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் ஜே வெங்கடேசன் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட செயலாளா் கே. . நடராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் கா. பெருமாள் கலந்து பேசினாா்.

இந்த கூட்டத்தில் 20 ஆண்டுகளாக தீா்க்கப்படாத கோரிக்கைகள் வலியுறுத்தி மாநில செயற்குழு கூட்டத்தின் முடிவின்படி டிசம்பா் 30 அன்று காலை 11.00 மணி அளவில் வேலூா் கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி இரு இரு கைஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் இந்தஆா்ப்பாட்டத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட சாலைப் பணியாளா்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் மாநில செயலாளா் லோ . சிவசங்கரன் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் ஜே நந்தகுமாா் வேலூா் மாவட்ட தலைவா் எஸ் குமரவேல் வேலூா் மாவட்ட பொருளாளா் சி வேலாயுதம் மாநில செயற்குழு உறுப்பினா் டி விநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளா் ஏ . தணிகாசலம் நன்றி கூறினாா்.