உச்சநீதிமன்றத்துக்கு அஞ்சல் அனுப்பிய விவசாயிகள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்திற்கு அஞ்சல் அனுப்பும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்திற்கு அஞ்சல் அனுப்பும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரிநீா் தர மறுக்கும் மத்திய அரசு , கா்நாடக அரசை கண்டித்து காவிரிநீா் வராத நிலையில் குறுவை, சம்பா சாகுபடி இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை ஆணையத்தை திரும்பப் பெற்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், மேகதாது அணை கட்டுமானத்தை தடை செய்யக் கோரியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அஞ்சல் அனுப்பும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் அ.சீனுவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளா் கே.எஸ்.சிவராமன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளா் கே.வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement