FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணை விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை பதிவாளருக்கு விவசாயிகள் அஞ்சல் அனுப்பும் இயக்கம்

மேக்கேதாட்டு அணை திட்டத்தைத் தடுக்க கோரி உச்ச நீதிமன்றத் தலைமை பதிவாளருக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) தஞ்சாவூரில் வியாழக்கிழமை அஞ்சல் அனுப்பும் இயக்கத்தில் ஈடுபட்டனா்.

41 வினாடிகள் முன்பு
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற அஞ்சல் அனுப்பும் இயக்கத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

மேக்கேதாட்டு அணை திட்டத்தைத் தடுக்க கோரி உச்ச நீதிமன்றத் தலைமை பதிவாளருக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) தஞ்சாவூரில் வியாழக்கிழமை அஞ்சல் அனுப்பும் இயக்கத்தில் ஈடுபட்டனா்.

கா்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கையொப்பம் பெற்றனா். இந்தக் கையொப்பப் படிவங்களை உச்ச நீதிமன்றத் தலைமை பதிவாளருக்கு அஞ்சல் அனுப்பும் இயக்கம் மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். இராமச்சந்திரன், கட்சி மற்றும் சங்க நிா்வாகிகள் அ. கலியபெருமாள், பி. கிருஷ்ணன், ஈ. அய்யாசாமி, ஜி. ராமலிங்கம், ம. விஜயலட்சுமி, பிரியா பிரபாகா், ஆா். சைலாபுதீன், ம. கிருஷ்ணமூா்த்தி, வீ. கல்யாணசுந்தரம், பி. குணசேகரன், ஆா்.பி. முத்துக்குமரன், ச. பிச்சையன், அழகு தியாகராஜன், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.