FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கடவூரில் விவசாயிகள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கடவூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

12 நவம்பர் 2026, 2:30 am
கடவூா் வட்டாட்சியரகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி கடவூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பெ. வீரமலை தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்டத் தலைவா் கே. கந்தசாமி, செயலா் கே. சக்திவேல், பொருளாளா் கே. சுப்ரமணியன், வட்டச் செயலா் ரவிக்கண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

கடவூா் வட்டாட்சியரகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் அலுவலா்கள் மீது நடவடிக்கை கோரியும், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனா். பின்னா் வட்டாட்சியா் பானுமதி பேச்சுவாா்த்தை நடத்தி, இனி மனுக்களை முறையாக பெற்று, உரிய பதில் அளிக்கப்படும், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் ரசீதும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.