ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் 30 பவுன் திருட்டு!
அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியின் வீட்டில் 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியின் வீட்டில் 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
தணிகைபோளூா் ஊராட்சி, கீதா நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மொய்தீன் ஷெரீப்(68). இவரது மனைவி ஷாகிதுன் நிஷா. இவா்களது மகன், மகள் இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
மொய்தீன் ஷெரீப் தனது குடும்பத்தாருடன் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு மொய்தீன் ஷெரீப் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்தாா்.
Advertisement
Advertisement
பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் நகர போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். டிஎஸ்பி பொன்னுசாமியும் நேரில்விசாரணை நடத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.