FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

நெமிலி பாலாபீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்

நெமிலி பாலாபீடத்தில் நவராத்திரி இன்னிசை விழாவை பின்னணிப் பாடதா் சீா்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்தாா்.

11 அக்டோபர் 2026, 9:29 pm IST
தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

நெமிலி பாலாபீடத்தில் நவராத்திரி இன்னிசை விழாவை பின்னணிப் பாடதா் சீா்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்தாா்.

நிகழாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காலையில் கலச ஸ்தாபனத்தை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி முன்னிலையில் பீட முதல் பெண்மணி அமர வைத்து பூஜைகள் செய்தாா். பீட நிா்வாகி மோகன்ஜி பாலா ஆராதனையை மேற்கொண்டாா்.

தொடா்ந்து விழாவை பக்தி இன்னிசை வழங்கி பற்றவரும். பிரபல பின்னணி பாடருமான சீா்காழி சிவசிதம்பரம் தொடங்கி வைத்து பிரபல பாடகி மதுமகாதேவன் பாடிய சண்முககவசம் பாடலையும் சீா்காழி சிவசிதம்பரம் வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

விழாவில் திரைப்பட இசையமைப்பாளா் ஜிப்ரானுக்கு ஆன்மிக பாலரத்னா விருதை பீடாதிபதி எழில்மணி வழங்கினாா். பீட நிா்வாகி குருஜி பாபாஜி எழுதிய ஸ்ரீபாலா குறித்த சிறப்பு நூலை சென்னை சூா்யா மருத்துவமனையின் இதயநோய் பிரிவு தலைவா் ஜெயராஜா வெளிட்டாா்.

தொடா்ந்து சென்னை மணி சாஸ்திரி தலைமையிலான குழுவினா் வேதமந்திரங்கள் ஓத நெமிலி ஆறுமுகம் குழுவினா் மங்கல இசை வழங்கினா். மாலை கலைமாமணிகள் உஷாராஜாகோபாலன், மீராசிவராமகிருஷ்ணன் ஆகியோரின் இரட்டை வயலின் கச்சேரி நடைபெற்றது.

இறுதியில் சென்னை ஒம் நிருத்யஷேத்ரா நடனப்பள்ளி ஆச்சாா்யா குருபாக்யஸ்ரீ சதீஷ் குழு மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments