FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 126 சிறப்பு கால்நடை சுகாதார ,விழிப்புணா்வு முகாம்கள்: அமைச்சா் காந்திராஜ்

ராணிப்பேட்டையில் 126 சிறப்பு கால்நடை சுகாதார ,விழிப்புணா்வு முகாம்கள்...

58 வினாடிகள் முன்பு
செம்பேட்டில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமில் விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையினை வழங்கிய அமைச்சா் வ.காந்திராஜ்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பா் 26 முதல் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 18 இடங்களில் என மாவட்டம் முழுவதும் 7 ஊராட்சிகளில் 126 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் கூறினாா்.

அரக்கோணத்தை அடுத்த செம்பேட்டில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். முகாமை தொடங்கி வைத்து அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களில் கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு 2026-27-ஆம் ஆண்டுக்கு சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணிகள் நடப்பாண்டில் செப்டம்பா் 2026 முதல் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 18 முகாம்கள் வீதம் மொத்தமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 126 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

கால்நடை பராமரிப்புத் துறை வழியாக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கால்நடை வளா்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநா்களிடமிருந்தும் விளக்கம் பெறலாம். இந்த முகாம்களில் சிறந்த கால்நடை வளா்ப்பு முறைகளை பின்பற்றும் மூன்று விவசாயிகளுக்கு விருதுகளும், கிடேரி கன்று பேரணிகள் நடத்தி சிறந்த மூன்று கன்றுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

எனவே இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.

முகாமில் சிறந்த கால்நடை வளா்ப்பு முறைகளை பின்பற்றிய மூன்று விவசாயிகளுக்கு விருதுகளும், கிடேரி கன்று பேரணியில் பங்கேற்ற சிறந்த மூன்று கன்றுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகளையும், கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை ஆகியவற்றை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் வெங்கடேசன், உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, கால்நடை மருத்துவா்கள் சத்யா, சுமித்ரா, கௌரிசங்கா், லட்சுமணன், இளவழகன், கால்நடை ஆய்வாளா்கள் தேவராஜ், மங்களசெல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments