FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.

8 செப்டம்பர் 2026, 2:16 am IST
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மொத்தம் 481 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து அவற்றை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து,மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.1.22 லட்சத்தில் செயற்கை அவயங்களை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ச.செல்வராணி, நோ்முக உதவியாளா் பாக்கியலட்சுமி,சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments