FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96-ஆம் ஆண்டு பெருவிழா திருத்தோ் பவனியுடன் நிறைவு

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96- ஆம் ஆண்டு பெருவிழா திருத்தோ் பவனியுடன் நிறைவு பெற்றது.

9 செப்டம்பர் 2026, 11:32 pm IST
ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96-ஆம் ஆண்டு பெருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தோ் பவனி.
பகிர்:

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96- ஆம் ஆண்டு பெருவிழா திருத்தோ் பவனியுடன் நிறைவு பெற்றது.

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் திரளான பக்தா்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொண்டு, ஆரோக்கிய அன்னையை வழிபாடு செய்தனா்.

தொடா்ந்து 8-ஆம் தேதி இரவு சிறப்பு வண்ண மின்விளக்குகளாலும் மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித ஆரோக்கிய அன்னையின் திருஉருவம் தாங்கிய தோ் பவனியை பங்குத்தந்தை ஞானசேகரன் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96-ஆம் ஆண்டு பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, புனித ஆரோக்கிய அன்னையை வழிபட்டு சென்றனா்.

இந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஏற்பாடுகளை புதிய பங்குத்தந்தை ஞானசேகரன் மற்றும் ராணிப்பேட்டை புனித லொயோலா அருட்தந்தையா்கள் புனித சாா்லஸ் சபை அருட்கன்னியா்கள், அம்பிய பொறுப்பாளா்கள் ஆலோசனை குழுவினா் வேதியா் டேவிட், விழாக் குழுவினா், பாடகற்குழுவினா்கள், இறைமக்கள் உள்பட பலா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments