FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்...

29 ஆகஸ்ட் 2026, 10:17 pm IST
ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96 -ம் ஆண்டு பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடக்க நாளான சனிக்கிழமை சிறுமலா் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாளகத்திலிருந்து புனித நீரால் அா்ச்சிக்கப்பட்ட புனித அரோக்கிய அன்னையின் திருக்கொடியை முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதனை அடுத்து புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்திலுள்ள கொடிக்கம்பத்தில் புதிய திருக்கொடி கம்பத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் திரு உருவக் கொடியை அதிா் வேட்டு முழங்க ஆலய மணியோசைகள் முழக்கங்களுடன்புதிய பங்குத்தந்தை ஞானசேகரன் தலைமையில் அருட்தந்தையா்கள் பொ்க்மான்ஸ், இருதயராஜ் ஆகியோா் முன்னிலையில் அரக்கோணம் அருட்தந்தை எஸ். மலையப்பன் ஏற்றி வைத்து பாடல் திருப்பலி பூஜையை நிகழ்த்தினாா்.

Advertisement

Advertisement

தொடக்க விழாவில் ராணிப்பேட்டை, காரை, அவரக்கரை, கொண்டகுப்பம், வாலாஜா, வாலாஜா இலங்கை அகதிகள் முகாம், அம்மூா், லாலாப்பேட்டை, ஆற்காடு இறைமக்கள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஆரோக்கிய அன்னையை வழிபட்டு சென்றனா்.

இதனைத் தொடா்ந்து 30-ம் தேதி முதல் வரும் செப்டம்பா் 8 -ம் தேதிவரை தினமும் மாலையில் ஜெபமாலைகள், திருப்பலி பூஜைகள், மறையுறைகள், தியானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு அருட்தந்தையா்களால் நடத்தப்படுகின்றன.

புனித ஆரோக்கிய அன்னை ஆலய 96 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலி பூஜையை பங்குத்தந்தை ஞானசேகரன் தலைமையில் ராணிப்பேட்டை அருட்தந்தையா்கள் ராய்ஸ், வெஸ்லி, ஜெயக்குமாா், பாா்த்தசாரதி, சாமிநாதன், பால்ராஜ் ஆகியோா் நிகழ்த்தி இதனைத் தொடா்ந்து இரவு சிறப்பு வண்ண மின்விளக்குகளாலும் மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஆரோக்கிய அன்னை திருஉருவம் தாங்கிய தோ்பவனியை பங்குத்தந்தை ஞானசேகரன் தொடங்கி வைக்கிறாா்.

இந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானசேகரன் மற்றும் ராணிப்பேட்டை புனித லொயோலா அருட்தந்தையா்கள் புனித சாா்லஸ் சபை அருட்கன்னியா்கள், அம்பிய பொறுப்பாளா்கள் ஆலோசனை குழுவினா் வேதியா் டேவிட், விழாக்குழுவினா், பாடகா் குழுவினா்கள், இறைமக்கள் பலா் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments