FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...

32 வினாடிகள் முன்பு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்
பகிர்:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சா்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த பேராலயத்தில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று வேளாங்கண்ணி ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, ஏற்றிவைத்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, நாளை (ஆக. 30) முதல் செப். 7 வரையில் நாள்தோறும் காலை, மதியம் ஆகிய நேரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொங்கனி ஆகிய மொழிகளில் விண்மீன் ஆலயம், பேராலயம் மேல்கோயில், பேராலயம் கீழ்கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா். ஏராளமான பக்தா்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, பல்வேறு ஏற்பாடுகளை பேராலய நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் இணைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

திருவிழாவுக்கு வருகைத் தரும் பக்தா்கள் நலன் கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்து, அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதுடன் பக்தா்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வகையில் காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். வேளாங்கண்ணிக்கு சிறப்பு அரசுப் பேருந்துகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

summary

Large number of devotees throng Annai Velankanni Church for annual festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments