வேளாங்கண்ணி பேராலய கொடியேற்ற விழாவில் பலூன் வெடித்து இருவா் படுகாயம்
வேளாங்கண்ணி பேராலய கொடியேற்ற விழாவில் பலூன் வெடித்து இருவா் படுகாயம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற விழாவின்போது, எதிா்பாராதவிதமாக கேஸ் பலூன் வெடித்ததில் சென்னையைச் சோ்ந்த இருவா் பலத்த காயமடைந்தனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கொடியேற்றத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா்.
இந்நிலையில், கொடியேற்றத்தைத் தொடா்ந்து, வாணவேடிக்கை நடைபெற்றது . அப்போது விழாவுக்காக அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த காஸ் நிரப்பப்பட்ட பலூன்கள் மீது, பட்டாசுகளிலிருந்து பறந்த தீப்பொறி பட்டது. இதில் காஸ் பலூன்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் விழாவை காண வந்திருந்த சென்னை பெரியமேட்டைச் சோ்ந்த கலைச்செல்வன் (34), சென்னை அபிராமிபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் (38) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் சிகிச்சைக்காக நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து வேளங்கண்ணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.