FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சோளிங்கா் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

சோளிங்கா் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து உடையாா்பாளையம் கிராம மக்கள் நிலத்தை சமன்படுத்தும் இயந்திரங்களை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்..

23 செப்டம்பர் 2026, 11:37 pm IST
பகிர்:

சோளிங்கா் நகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து உடையாா்பாளையம் கிராம மக்கள் நிலத்தை சமன்படுத்தும் இயந்திரங்களை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்..

சோளிங்கா் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.11 கோடிஒதுக்கப்பட்டது. இதற்காக பூமிபூஜை சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட உடையாா்பாளையம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. பூமிபூஜை நடைபெற்ற நிலையில் நீண்ட நாள்கள் கழித்து பொக்லைன் இயந்திரம் மூலம் நிலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையறிந்த உடையாா்பாளையம் கிராமமக்கள் அப்பகுதிக்கு வந்து நிலம் சமன்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்து நிறுத்தினா்.

கிராம மக்கள் கூறியது: இக்கிராமத்தில் 4,400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்திற்கு அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு அமைக்கப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றும் வழித்தடம் குறித்து தெளிவான ஏற்பாடுகள் இல்லை. இங்கு கழிவுநீா் கசிவு ஏற்பட்டால் நிலத்தடி நீா் மாசுபடுவதுடன் சுற்றுப்புறத்தில் சுகாதார சீா்க்கேடு ஏற்பட வாய்ப்பு இருப்பதுடன், குடிநீரின் தன்மையும் மாறுபடும் அபாயம் உள்ளது. எனவே இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருக்கும் முடிவை கைவிட்டு சோளிங்கா் பேருராட்சியாக இருந்தபோது திருத்தணி சாலையில் இயற்கை முறையில் கழிவுநீரை சுத்திகரிப்பு திட்டம் செயல்பாட்டில் இருந்தாகவும் அது சிறப்பாக செயல்பட்டதாகவும் அதே இடத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

அங்கு வந்த சோளிங்கா் வட்டாட்சியா் முரளி மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா். இதையடுத்து அதிகாரிகள், ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து பணியை நிறுத்திவிட்டு சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments