அரசு மானியத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
பழப் பொருள்கள் பதப்படுத்தும் தொழிற்சாலையை ஆய்வு செய்த திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா்.
திருப்பத்தூா், கந்திலி ஒன்றியங்களில் அரசு மானியத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வரும் தொழிற்சாலைகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு மானிய உதவி வழங்கப்பட்டு பல்வேறு மதிப்புக்கூட்டும் தொழில் மையங்கள் அமைக்கப்பட்டு வரப்படுகின்றன. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், திருப்பத்தூா் வட்டாரம், காக்கனம்பாளயம் பகுதியில் ரூ. 46 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசு மானியத்தில், சிறுதானிய மதிப்புக் கூட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கந்திலி ஒன்றியம், பெரியகரகப்பட்டி பகுதியில் தென்னை நாா் நிறுவனம் சாா்பாக ரூ. 97 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம், கந்திலி பகுதியில் ரூ. 40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பழ பயிா்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் மையம், கந்திலி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித்திட்டம் 2025-2026-இன் கீழ், ரூ. 433 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கந்திலி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டட கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் காா்த்திகேயன், தோட்டக் கலை துணை இயக்குநா் தீபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அப்துல் ரஹ்மான், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் ராமமூா்த்தி, வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளா் செல்வம், மாவட்ட முன்னாடி வங்கி மேலாளா் விஜயகுமாா், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் மகேந்திரவா்மன். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரகலா, லதா ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.