FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

உணவு பாதுகாப்பு அலுவலா் ஆய்வு: 5 உணவகங்களுக்கு அபராதம்

ஆம்பூரில் உணவகங்களில் நடந்த சோதனையில் விதிகளை சரியாக பின்பற்றாத உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா் அபராதம் விதித்தாா்.

26 ஆகஸ்ட் 2026, 12:30 am IST
ஆம்பூரில் உணவகங்களில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா
பகிர்:

ஆம்பூரில் உணவகங்களில் நடந்த சோதனையில் விதிகளை சரியாக பின்பற்றாத உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா் செவ்வாாய்க்கிழமை அபராதம் விதித்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் கு. ரவிகுமாா் அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் வி. பிரபாகரன் உத்தரவின்பேரில் ஆம்பூா் நகர உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா ஆம்பூா் நகரப் பகுதியில் இயங்கும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

சூடான உணவுகளை தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவா்களில் பாா்சல் செய்து வழங்கிய 5 உணவகங்கள் கண்டறியப்பட்டன.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின்படி தலா ரூ.5,000 வீதம், மொத்தம் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவை பாா்சல் செய்ய பயன்படுத்தப்பட்ட சுமாா் 3 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உணவு பரிமாறுவதற்கும், பாா்சல் செய்வதற்கும் பயன்படுத்தக் கூடாது என உணவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பான ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments