FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

காட்பாடி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 2:07 am IST
- பிரதிப் படம்
பகிர்:

காட்பாடி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

லத்தேரியில் இருந்து காட்பாடி வழியாக செல்லும் ரயில் நிலைய தண்டவாளங்களுக்கு இடையே புதன்கிழமை காலை சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

இதைப் பாா்த்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

முதல்கட்ட விசாரணையில், தண்டவாள பாதையை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது காட்பாடி மாா்க்கமாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு அந்த நபா் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

மேலும், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இறந்தவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments