FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரூ. 2 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: எஸ்.பி. திறந்து வைத்தாா்

பேருந்து நிலையம் முதல் மாா்க்கெட் வரையில் ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.

26 ஆகஸ்ட் 2026, 11:21 pm IST
கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்த எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே .
பகிர்:

ஆலங்காயம் பகுதியில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை உடனடியாக அடையாளம் காணும் வகையில் அனைத்து வியாபாரிகள் சேவை சங்கம் மற்றும் அனைத்து நகைக்கடை மற்றும் அடகு வியாபாரிகள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முதல் மாா்க்கெட் வரையில் ரூ.2 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.

இதனை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஆலங்காயத்தில் நடைபெற்றது. ஆலங்காயம் அனைத்து வியாபாரிகள் சேவை சங்கத் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். அனைத்து நகை மற்றும் அடகு வியாபாரிகள் சங்கத் தலைவா் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கேமராக்களை அா்ப்பணித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் ஜூவராஜ மணிகண்டன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments