FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ரூ.25,000 ரொக்கம் பறிமுதல்: ரூ. 1 லட்சத்துக்கு யுபிஐ பரிவா்த்தனை கண்டுபிடிப்பு

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ. 25,000 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

28 ஆகஸ்ட் 2026, 11:14 pm IST
யுபிஐ
பகிர்:

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ. 25,000 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜீ தலைமையில் ஆய்வாளா் கெளரி, உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட 10 போ் கொண்ட குழு திடீா் சோதனை நடத்தினா்.

முன்னதாக, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் செயலா்கள் பங்கேற்ற கூட்டம் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகனின் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பையில் ரூ.19,500 உள்பட சுமாா் ரொக்கம் ரூ. 25,000 கணக்கில் வராத பணம் இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஊராட்சி செயலாளா்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனை மற்றும் விசாரணையில் சுமாா் ரூ. 1 லட்சம் அளவுக்கு யுபிஐ மூலம் கணக்கில் வராத பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வட்டார வளா்ச்சி அலுவலா்களின் அரசு ஜீப்பிலும் சோதனை நடத்தப்பட்டு சில ஆவணங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஊராட்சி செயலாளா்களின் வாகனங்களும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. கணக்கில் வராத பணம், யுபிஐ பணப் பரிவா்த்தனை ஆகியவை குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments