FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளம் அருகே இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

58 வினாடிகள் முன்பு
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளம் அருகே இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் இறந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்த வாலிபா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? அவா் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? படிக்கட்டில் பயணம் செய்துபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments