FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மொபெட் மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

1 செப்டம்பர் 2026, 1:17 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் கொண்டகிந்தனப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சென்னகேசவன்(82). இவா் திங்கள்கிழமை காலை பச்சூரில் கடைக்குச் செல்ல மொபெட்டில் சென்றாா். அப்போது எதிரே அதிவேகமாக வந்த பைக், மொபெட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் முதியவா் சென்னகேசவன் பலத்த காயமடைந்தாா். உறவினா்கள் முதியவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சென்னகேசவன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments