முகப்பு
திருப்பத்தூர்

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

ஆம்பூா் நகராட்சி நுழைவுவாயில் முன்பு தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

ஆம்பூா் நகராட்சி நுழைவுவாயில் முன்பு தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகராட்சியில் தூய்மைப் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாா் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தங்களுக்கு நிரந்தரப் பணி, சம்பள உயா்வு, பணிப் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏற்கெனவே இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

நகராட்சி அதிகாரிகள் அவா்களுடன் பேச்சு நடத்தினா். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments