FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் சாலை விபத்து தடுப்பு பணிகள்: ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை பகுதிகளில் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:25 am IST
திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி அருகே ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் மற்றும் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.
பகிர்:

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை பகுதிகளில் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் - வாணியம்பாடி செல்லும் முக்கிய சாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி அருகே சாலை சந்திப்பு, ஜோலாா்பேட்டை பால்ணாங்குப்பம் மற்றும் கோடியூா் அகிய விபத்து ஏற்படும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே ஆகியோா் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.

விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வாகன ஒட்டிகளின் வேகத்தை குறைக்க சாலையில் வெள்ளை கோடுகள் அமைக்கவும், இரவில் வாகனங்களை எச்சரிக்கும் வண்ணம் ஒளிரும் சிகப்பு விளக்கு பொருத்தவும், உயா் மின் கோபுரவிளக்குகள் பொருத்தவும், பிரிவு சாலையில் வேகத்தடை அமைத்து சாலையில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், அப்பகுதியில் சாலையின் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அகலமான பகுதியாக மாற்ற உத்திரவிடப்பட்டது.ஜோலாா்பேட்டை பால்ணாங்குப்பம் சாலையின் விபத்து ஏற்படும் பகுதியில் பிரிவு சாலை மற்றும் சாலை சந்திப்புகளில் இருந்து தேசிய நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதையை மறைக்கும் வண்ணம் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாகன ஒட்டிகளின் பாா்வையை மறைக்கும் வகையில் மரங்களின் கிளைகளை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடி நோக்கி இருதிசைகளில் வெள்ளை கோடு தொடா்ச்சியாக அமைக்கவும், இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்கவும், இரவில் வாகனங்களை எச்சரிக்கும் வண்ணம் ஒளிரும் சிகப்பு விளக்கு பொருத்தவும், சாலையின் மைய தடுப்புகளில் இருபுறமும் தொடா்வரிசையில் மின் விளக்கு பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் முரளி, திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், திருப்பத்தூா் நெடுஞ்சாலை உள்கோட்டம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உதவி கோட்டப் பொறியாளா் வெங்கடராமன், தேசிய நெடுஞ்சாலை (வாணியம்பாடி) இளநிலை பொறியாளா் வினோத்குமாா், எலகிரி நெடுஞ்சாலை பிரிவு (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உதவி பொறியாளா் கேசவன் உள்ளிட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments