FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு

Updated On : 23 ஜூலை 2026, 1:01 am IST
ஆதா்ஷ் மெட்ரிக் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் நடைபெற்ற முகாம்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பொது மக்கள் மற்றும் பெண்கள், மாணவ, மாணவிகளிடையே சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் சத்யகலா தலைமை வகித்தாா். சிங்கப்பெண் உதவி காவல்ஆய்வாளா் வீரம்மாள் தலைமையில் போலீஸாா் கலந்து கொண்டு போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், பெண்கள் உதவி எண் 1091, போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு உட்பட முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்து கூறினா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments