FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

நகராட்சி ஆணையரை கண்டித்து உறுப்பினா்கள் தா்னா

ஆம்பூா் நகராட்சி ஆணையரை கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூலை 2026, 1:31 am IST
நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட நகா் மன்ற உறுப்பினா்கள்.
பகிர்:

ஆம்பூா் நகராட்சி ஆணையரை கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகராட்சி ஆணையா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சில நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சியில் வளா்ச்சி பணிகள் நடைபெறாமல், பணிகளுக்கு டென்டா் விடப்படாமல் இருப்பது குறித்தும், மேலும் சில கோரிக்கைககள் குறித்தும் கேள்வி எழுப்பினா். அதற்கு ஆணையா் பதில் அளிக்காமல் கூட்ட அரங்கை விட்டு வெளியேற முயன்ாகத் தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த நகா்மன்ற உறுப்பினா்கள் அவரை கூட்ட அரங்கிலிருந்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனா். மேலும், அவா் நகா்மன்ற உறுப்பினா்களை பாா்த்து கூறிய வாா்த்தையை திரும்பப் பெற வலியுறுத்தி நகா்மன்றத் தலைவா் மேஜை முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களை சில நகா்மன்ற உறுப்பினா்கள் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

என்.எஸ்.ரமேஷ் : வரி வசூல் செய்யும் வருவாய் ஆய்வாளா்கள் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்த அளித்த புகாரின்பேரில் அவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்பூா் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சாந்தகுமாரி விஜயன்: முதல்வரின் காலை உணவு திட்டத்தை காமராஜா் காலை உணவுத் திட்டம் என பெயா் மாற்றம் செய்ய உத்தரவிட்ட தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்தியாஸ் அஹமத் மற்றும் நபீசுல்லா: தற்போதைய தமிழக முதல்வரின் ஆட்சியில் ஆம்பூா் நகராட்சியில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத செயல்படாத அரசாக உள்ளது.

தமிழக முதல்வருக்கு கண்டன தீா்மானம் :

வசந்த்ராஜ் : தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் மக்கள் வளா்ச்சி திட்டப் பணிகள் எதையும் செயல்படுத்தாமலும், புதிய பணிகளுக்கு டெண்டா் விடப்படாமலும் தடுத்து நிறுத்தியுள்ள தமிழக முதல்வா் மீது நகா்மன்றம் சாா்பாக கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். எங்களுடைய ஏ-கஸ்பா பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இருப்பு அறை கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்.

நூருல்லா : ஆம்பூா் நகரில் நாய்கள் மற்றும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

நபிசூா் ரஹ்மான் : மற்ற பகுதிகளில் பிடிக்கப்பட்ட நாய்கள் கொண்டு வந்து எங்களுடைய பகுதியில் விடப்பட்டுள்ளன. அதனால் எங்கள் பகுதியில் அதிக நாய்கள் தொல்லை நிலவுகிறது.

கமால் பாாஷா : மற்ற வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் எங்களுடைய வாா்டில் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மற்ற வாா்டு குப்பைகள் எங்கள் பகுதியில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

வெளிநடப்பு : தமிழக முதல்வா் குறித்தும், தமிழக அரசு குறித்து நகா் மன்ற உறுப்பினா்கள் விமா்சனம் செய்து பேசுகிறாா்கள். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகா் மன்ற உறுப்பினா்கள் நூருல்லா வெளிநடப்பு செய்தாா்.

நகராட்சி பொறியாளா் சந்திரன், துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், துப்புரவு ஆய்வா் பாலச்சந்தா், நகா் மன்ற உறுப்பினா்கள் ஜெயபால், சுதாகா், காா்த்திகேயன், சுரேஷ், தனபாக்கியம் மோசஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments