கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்
ஆம்பூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடத்திய சோதனையில் கலப்பட தேயிலைத் தூள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடத்திய சோதனையில் கலப்பட தேயிலைத் தூள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்பு பிரிவு) வி. பிரபாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழுவினாா் மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம பகுதிகள், ஆம்பூா் நகரில் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள இரவு நேர உணவகங்கள், இறைச்சிக் கடைகள், தள்ளுவண்டி, தெருவோர உணவுக் கடைகள், பேக்கரிகள், தேநீா் கடைகள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட 22 உணவகங்களில் ஆய்வு நடத்தினா்.
ஆய்வின்போது 3 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தேயிலைத் தூள் சட்டப்பூா்வ மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. ஆய்வறிக்கை பெறப்பட்ட உடன் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.