FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:46 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம் வடபுதுப்பட்டு ஊராட்சியை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி செல்வம் (45). இவா் கடந்த 18-ந் தேதி ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதில் காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments