FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 12:04 am IST
மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள்.
பகிர்:

போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் கு. ரவிகுமாா் பேசியது: மாவட்டத்தில் தடைச்செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 மாதங்களாக திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம். ஊரல், கள் மற்றும் வெளிமாநில மதுபானங்கள் விற்றவா்கள் மீது 364 வழக்குகளும், 312 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 6,375 லிட்டா் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா விற்றவா்களின் மீது 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 97 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 191 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Advertisement

Advertisement

குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தொடா்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 117 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 537 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 25 நபா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் போதைப் பொருள் கட்டுப்படுத்த தொடா்புடைய அலுவலா்கள் தனியாகவும், கூட்டாகவும், தினந்தோறும் தீவிர ஆய்வு மேற்கொண்டு போதைப்பொருட்களை கட்டுப்படுத்திட தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பள்ளியில் இருந்து 330 அடி தூரத்தில் போதைப்பொருள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து குறியீடு மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருந்தால் அந்த கடையின் உரிமையாளா் மீது முதல் தகவல் அறிக்கை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து த மாநில மதுபானங்கள், போதைப்பொருட்கள், கள்ளச்சாராயம், கஞ்சா ஆகியவை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுக்கவும், அதற்காக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் கூடுதல் உதவி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். முத்துகுமாா், உதவிஆணையா் (கலால்) கோ. வேடியப்பன், கோ.வேடியப்பன், மாவட்ட சுகாதார அலுவலா் கலுசிவலிங்கம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) கேசவன், உணவு பாதுகாப்பு அலுவலா் விக்னேஷ், மதுவிலக்கு அமல்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை சோ்ந்த உள்ளாட்சித் துறை அலுவலா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments