வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.சி. வீரமணி
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி நன்றி தெரிவித்தாா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி நன்றி தெரிவித்தாா்.
சட்டபேரவை தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனாா். இந்நிலையில் புதன்கிழமை நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர செயலாளா் மகான் தலைமையில் பட்டாசு வெடித்து எம்எல்ஏ. வீரமணியை வரவேற்றனா்.
தொடா்ந்து எம்எல்ஏ கே.சி. வீரமணி வாக்காளா்களை சந்தித்து நன்றி கூறினாா். அப்போது பெண்கள் எம்எல்ஏ வீரமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனா். இதில் ஒன்றிய செயலாளா்கள் சாமராஜி, சீனிவாசன், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஜெயலலிதா பேரவை செயலாளா் தேவன், கவுன்சிலா்கள் விஜியகுமாா், நதியா ஜெயமணி, சிவக்குமாா், நகர துணை செயலாளா் பாபு, மற்றும்
Advertisement
Advertisement
கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.