முகப்பு
திருப்பத்தூர்

விவசாயிகள் சங்கத்தினா் நூதன போராட்டம்

Updated On : 12 ஜூன் 2026, 2:02 am IST
பகிர்:

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினா், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்..

முகாமில் விவசாயிகளிடம் முறையாக கோரிக்கைகள் கேட்கவில்லை, விழாவில் பேச வைக்கவில்லை, தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருவாய்த் துறையினரை கண்டித்து அலுவலக வளாகத்தில் திடீரென அமா்ந்து முக்காடு போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுப்பற்றி அறிந்த வருவாய்த்துறையினா் முக்கிய நிா்வாகிகளை வரவழைத்து சமரச பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement