நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்
நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சிபெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்.
நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சிபெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து ஆட்சியா் கு.ரவிகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இந்த பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும்,10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும் 18 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சி சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பயிற்சி பெறும் காலங்களில் இளைஞா்களுக்கு உதவித் தொகையாக ஒரு மாதத்துக்கு ரூ. 2,000 வீதம் வழங்கப்படும். பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.