மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை
குரிசிலாப்பட்டு அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குரிசிலாப்பட்டு அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ள கொட்டாவூரில் வசிப்பவா் வெங்கடேசன். மளிகை வியாபாரி. இவருக்கு திருமணம் ஆதிலட்சுமி என்ற மனைவி உள்ளாா். இவா்களின் மகள் காவியா. இந்த நிலையில் காவியா பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி இருந்தாா். அதில் காவியா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. விரக்தியடைந்த காவியா இரவு தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement