FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: நகராட்சி ஆணையரிடம் மனு

வாணியம்பாடி நகராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தாா்.

2 நவம்பர் 2026, 11:51 pm
பகிர்:

வாணியம்பாடி நகராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தாா்.

வாணியம்பாடி நேதாஜி நகா் 36-ஆவது வாா்டு உறுப்பினா் ஜஹீா் அகமத் நகராட்சி ஆணையரிடம் அளித்த மனு: வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நேதாஜி வடக்கு வாா்டு 36 பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் வாா்டு ஜி பிளாக் 20 டிஎஸ் நம்பா் 30-இல் உள்ளது. இந்த இடத்தை தனியாா் ஒருவா் வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறாா்.

இந்த இடமானது மாணவா்கள் விளையாட பயன்படுத்தி வருகிறாா்கள். இந்த இடத்தை சுற்றுச் சுவா் அமைத்து நகராட்சி தன் பயன்பாட்டுக்கு எடுத்து பொது மக்கள் பயன்பெறும் வகையில் சிறிய பூங்கா அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இதையடுத்து நகராட்சி மற்றும் நில அளவை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments